Thursday 3 March 2011


வறுமையின் வளமை

ஓலைக்குடிசை
வளைந்து நிற்கிறது

ஓட்டைகளோடு
வயி்ற்று சோறு
ஒருவேளை
அதுவும் சிலவேளை
எப்போதாவது
விளக்கின் வெளிச்சம்
விதியில் தெரியும்!
வறுமை வளமாக வாழ்கின்றது
இங்கே!
மழைத்துளிகள் வெளியில் இருந்து
உள்ளே செல்ல
கண்ணிர் துளி உள்ளே இருந்து
வெளியே வந்து போகின்றது!
இந்த பூமி மேட்டின்
மேல் வறுமையின்
பாட்டு கேட்டுக்கொண்டே
இருகின்றது
ஆண்டாண்டுகாலமாக!
திருவிளையாடல்



ஏழை தான் நான் _ ஆனால்
என் வீட்டினில் ஆயிரம் விளக்கின் ஒளி
எப்படித் தெரியுமா?- அத்தனையும் ஓட்டைகள்
என் வீட்டு கூரையில் சூரிய நமஸ்காரத்துக்கு
நான் வாயிற்படி தாண்டியதில்லை
உச்சி வேளையில் உணவு வேகவைக்க
வெப்பமூட்டுவதில்லை - ஏன்னென்றால்
வெந்துபோய் இருக்குது, வறட்சியால் என் வீடு.
இரவில் என் வீட்டினுள் நிலாசோறு
மார்கழிப் பூவெல்லாம் மலர்கின்றது என்
வீட்டில் மழைக்காலமென்றால்
மழலைக்கு கொண்டாட்டம்
எனக்கோ நீரோட்ட போராட்டம்!
ஒழுகும் நீரைப் பிடிக்க ஒட்டை சட்டி
அடுப்பங்கரைக்குள் ஆறு வெள்ளம்
நித்திரைக்கு வழியில்லை, நிம்மதிக்கு துணையில்லை
இயற்கைக்குக்கூட இத்திருவிளையாடல்
நடத்த இடமே இல்லையா......?
என் வீட்டை தானே எட்டிப் பார்க்கிறது.......

நாளைய பதிவுகள்

என் செல்லமே, மேகத்தின்
வெப்பத்தில் இன்றைய
சுவடுகள் நாளை
பதிவாகின்றன - நீண்ட
யுகத்தைப் பற்றி - ஒற்றை
வினாடியில் நீ ஊர்ந்து
கொண்டுடிருப்பதை விட்டுவிட்டு
சுற்றி வரும் உலகைப் பற்றி பிடி
யாராவது தட்டிப் பறித்தல் எட்டிப் பிடி
நாளைய சமுதாயத்திற்காக
கணினியையும் கலப்பையும் கற்றுக் கொள்,
விண்வெளியின் முதுகில் - உன்
விரல்கள் தொடு,
தேடிக் கொண்டிரு - புதியன
புறப்பட்டுக் கொண்டு வரும்.

மனத்துளிகள்

மூடுகின்ற பனிக்கும் எனக்கும்
இடையே தொட்டு போகிறது சோலை காற்று
மழை விழுந்து படி இருக்க,
எப்படியே செல்லமாய் - வந்து
மோதுகின்றது மெல்லிய சாரல்,
தாழ்பால் விலகுகின்ற நொடியில்
உள்ளே வரலாம் - என
கதவடியில் காத்திருந்தது
எட்டி பார்க்கிறது வெய்யில்,
நான் பூச்சுடுவது இல்லை,
இருந்த போதும் - எனக்கு
பூச்சூடி விடுகின்றன மரங்கள்
தங்கள் பூக்களை உதிர்த்து,
மெல்லிய இரவில்,
சாந்தமான தோற்றத்துடன்
அருகில் வந்து அமர்கின்றது என் நிழல்,,
மௌனமாய் இருக்கும் போது,
மழை கசிந்த இரவில்
மனதின் ஓரத்தில் மௌனம் பேசிக்கொண்டிருக்கும்,
மின்சாரம் விடுமுறை எடுக்கும் போது,
இருளில் மடியில் மின் மீனி பூச்சிகள்
மெல்லா சிரிக்கும்
என் கண் இமைக்கும் - இவ்வாறு
ஒவ்வொரு நாளும் விட்டு செல்கின்றன,
என் மனத்துளிகளை!

அமைதி

அமைதியாக அகதியாக,
தங்க இல்லம் ஏதுமின்றி
இடங்கள் பெயர்ந்து,,
உடமைகள் இழந்து,
உயிர்கள் போகும்,
நிலையினை மாற்ற
மரண நிழலில் வாழும் போது
மகிழ்ச்சி வாழ்வை எமக்கருள,
கவலை அனைத்தையும் போக்கி
எமக்கு கனிந்த அமைதி விரைவில் வர,
அச்சம் கொண்டு அழுது புலம்பி
அஞ்ச என்றுரைக்க இனி ஒரு யுகம் வருமா???

Wednesday 2 March 2011


ஏன் இந்த மாற்றம்

குளிர்கின்ற தென்றலும்
அனல் காற்றாய் ஆனது
மனம் வீசும் மலர்களும்,
வசனையற்றுப் போனது.
சுழல்கின்ற உலகமும்
தள்ளாடத் தொடங்கியது
காரணம் கண்டன கட்சிகளாக
பூமியில் ஏழைகளின் கண்ணிர்
அதனால் நாடே சீர்கெட்டுப் போனது
கொட்டுகின்றான் பணத்தை கோவிலில்
குறைகள் நீங்குமென்று!
பக்கத்து வீட்டுப் பச்சிளன்குழந்தை
பாலுக்கு அழுவதைக் கண்டும்,
வழுக்கி விழுந்த வயதானவரை
படிதாண்டிப் போகிறான்
தூக்கிவிட்டால் தொற்றிவிடுமாம்
பட்டகைகளில் நோய் என்று!
தமிழ் இளைஞர்களை ஈழத்தில்
கிடங்கு தோண்டி பெட்ரோல் உற்றி,
உயிரோடு கொளுத்துகின்றனர்
அவலக் குரல் அடங்கும்வரை!
ஆறறிவு படைத்த மனிதனே
ஜந்தறிவை மட்டும் பயன்படுத்துவதேன்?
தீமைகள் விட்டுவிடு தீர்வுகளை எடுக்க்விடு
மனிதநேயம் வளர்த்துக்கொள்
மனிதனாக மாறிவிடு..
மனிதசக்தியின் மகத்துவம்

கூரையினைப் பார்த்துக்கொண்டு
முலையில் முடங்கிக் கொண்டு
நாளைக்காக காத்துக்கொண்டு
முறையான வாழ்வினை முடக்கிவிட்டு
தெளிவான வாழ்வினை தொலைத்துவிட்டு
தரங்கெட்டு, நன்மதிப்பு கெட்டு வாழும் - இந்த
மனித சமுகமே இன்னுமா உன்னுள் உறங்கிக்கிடக்கும்
"மனித சக்தியை " அறியவில்லை !
ஒருவேளை உணவிற்காக அடிமைப்பட்டு
உனது தன்மானத்தை விட்டெறிந்து
காசை நினைத்து காலம் தள்ளும் மானிடனே
உன்சக்தியினை நீ அறியவில்லையா
போதைக்கு அடிமைப்பட்டு
தன்னம்பிக்கையினைவிட்டு
நல்வாழ்விற்கு பூட்டு போட்டு வாழும் மானிடனே
ஜாதி,மதத்திற்கு உயிரை விட்டது போதும்
ஜிந்தறிவு ஜிவிகளிடமிருந்து உன்னை
வேறுபடுத்திக்கோள்
விண்ணைத் தொட்ட இந்த மனித சக்தி
மண்ணைவிட்டு நீங்குவதில்லை
நாள்தோறும் சவிற்காக நாளேட்டை பார்த்த
நோயாளிக்கு நுறுவயது தருமிந்த "மனிதசக்தி"
தனக்காக வாழாது, பிறருக்கென வாழ்ந்து
பிறர் நலத்தின தன்னலமாக கருதிய
அன்னை தெரசாவின் "கருனைசக்தி"
இதுபிரபஞ்சத்தினை மிஞ்சும் "மகா சக்தி"